Tirupanazhwar
திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் திருமாலின் ஸ்ரீவத்சம் என்னும் மருவின் அம்சமாக உறையூரில் பாணர்கள் வசிக்கும் பகுதியில் நெல்வயலில் அவதரித்தார், அவ்வழி வந்த பாணன் ஒருவன் அவரைக் கண்டெடுத்து குலவழக்கப்படி, பாடல் பாடுவதற்கும், யாழ் வாசிக்கவும் கற்றுக் கொடுத்தான். இவர் தாழ்ந்த குலம் என்பதால் திருவரங்கம் கோயிலுக்குச் செல்ல முடியாமல் காவிரி நதியின் தென்கரையில் நின்று அரங்கன் இருக்கும் திசை நோக்கி தொழுது மகிழ்ந்தார்.

ஒருநாள் லோக சாரங்கர் என்று முனிவர் திருவரங்கனுக்குத் திருமஞ்சனம் செய்வதற்கு நீர் எடுக்க காவிரிக்கு வந்தபோது அங்கு இருந்த திருப்பாணாரை ஒதுங்கிச் செல்லுமாறு கூறினார். யாழிசையில் மூழ்கி இருந்த திருப்பாணாருக்கு அவரின் சொற்கள் காதில் விழவில்லை. அதனால் கோபம் கொண்ட முனிவர் திருப்பாணார் மீது ஒரு கல்லை எறிய அது பாணர் முகத்தில் பட்டு ரத்தம் வழிந்தது. பின்னர் முனிவர் குடத்தில் நீரை எடுத்துக் கொண்டு சன்னதிக்குச் சென்றhர். அங்கு அரங்கனின் நெற்றியில் குருதி வழிவதைக் கண்டு திடுக்கிட்டு மன்னருக்குத் தெரிவித்தனர். மன்னன் காரணம் புரியாமல் குழப்பமடைந்தான்.

அன்றிரவு, அரங்கன் சாரங்க முனிவரின் கனவில் தோன்றி, "நீர் யார் மீது கல் எறிந்து காயப்படுத்தினீரோ, அவன் நமது அன்பன். நீங்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக பாணனை உங்கள் தோளில் சுமந்து எனது சன்னதிக்கு அழைத்து வரவும்" என்று கட்டளையிட்டார். மறுநாள் காலையில் முனிவர் அரங்கனின் அடியார்களுடன் காவிரி நதிக்கரைக்குச் சென்று அங்கு யாழிசைத்துக் கொண்டிருந்த பாணரைச் சந்தித்து நடந்ததைக் கூறி தன் தோளில் சுமந்து வந்து அரங்கனின் சன்னதியில் இறக்கிவிட்டார். அரங்கனின் கருணையை வியந்து பாணார் அவனைப் பாடிப் பணிந்தார்.

திருப்பாணாழ்வார், எம்பெருமானின் திருமுடி முதல் திருவடி வரையிலான வர்ணனை கொண்ட "அமலனாதிப் பிரான்" என்ற பத்துப் பாசுரங்களை இயற்றினார்.

அமலனாதிப் பிரான்

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.